சினிமா செய்திகள்

முக கவசம் அணிந்து ஸ்பைடர்மேன் நடிகர் கொரோனா விழிப்புணர்வு

முக கவசம் அணிந்து ஸ்பைடர்மேன் நடிகர் கொரோனா விழிப்புணர்வு செய்துள்ளார்.

உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் வரிசையில் அதன் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தில் டாம் ஹாலண்ட் நடிக்கிறார். இவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஸ்பைடர் மேன் உடையில் இருக்கும் டாம் ஹாலண்ட் தனது முகத்தில் இன்னொரு முக கவசத்தை அணிந்து இருக்கிறார். அனைவரும் முக கவசம் அணியுங்கள் நான் இரண்டு முக கவசம் அணிந்து இருக்கிறேன் என்ற பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். ரசிகர்கள் கொரோனா பரவலில் இருந்து தப்பிக்கும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஸ்பைடர் மேன் 3 அடுத்த வருடம் டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்