சென்னை,
நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது.
எஸ்.டி.ஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்த படம் மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எஸ்.டி.ஆர்.
இந்தச்சூழலில் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டு சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதன்படி இந்த படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.