சினிமா செய்திகள்

3 புதிய படங்களில் கதாநாயகனாக சூரி

நகைச்சுவை நடிகர்கள் பலர் கதாநாயகனாக நடிக்கிறார்கள். இப்போது சூரியும் 'விடுதலை' படம் மூலம் கதாநாயகனாகி உள்ளார். இந்த படம் திரைக்கு வர உள்ளது. இதுகுறித்து சூரி அளித்துள்ள பேட்டியில், "நான் நகைச்சுவை நடிகராக வளர்ந்த பிறகு சில இயக்குனர்கள் என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க கதை சொன்னார்கள். அதுவும் நகைச்சுவை கதைகளாகவே இருந்தன. மற்ற நடிகர்கள் படங்களில் காமெடி வேடங்களில்தானே நடிக்கிறேன் என்று சொல்லி அவற்றில் நடிக்க மறுத்தேன்.

எனக்கு வெற்றிமாறனை மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் சில காட்சிகளாவது நடிக்க ஆர்வமாக இருந்தேன். அப்போது விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கொடுத் தார். இந்த படத்தில் வேறு சூரியை பார்ப்பீர்கள். விஜய்சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கும்போது பல படங்களில் காமெடி வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. விடுதலை படப்பிடிப்புக்கு இடையூறு வரக்கூடாது என்று கருதி அவற்றில் நடிக்க மறுத்து விட்டேன். நான் கதாநாயகனாக நடிப்பதை அறிந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தினார்.

அடுத்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் இயக்கும் படத்திலும், விக்ரம் சுகுமாரன் இயக்கும் படத்திலும், அமீர் இயக்கும் படத்திலும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன்' என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்