சினிமா செய்திகள்

ரகுல் ப்ரீத்சிங்–சாய் பல்லவி ஜோடியுடன் செல்வராகவன் டைரக்‌ஷனில், சூர்யா

சூர்யா கதாநாயகனாக நடிக்க, செல்வராகவன் டைரக்‌ஷனில், ஒரு புதிய படம் தயாராகி வருகிறது.

சூர்யா நடிக்கும் 36வது படம். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள். சூர்யாசெல்வராகவன் இணைந்து பணிபுரியும் முதல் படம், இது.

படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் கட்ட படப்பிடிப்பும், பாடல் பதிவும் முடிவடைந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தயாராகி வருகிறார்கள். படத்துக்காக ரூ.3 கோடி செலவில் அம்பாசமுத்திரம் நகரத்தை போன்ற பிரமாண்டமான அரங்கு இரவுபகலாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதற்காக, ஆர்ட் டிபார்ட்மென்ட்டை சேர்ந்த 220க்கும் மேற்பட்டவர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு, இந்த அரங்கில் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெற இருக்கிறது. சூர்யா ஜோடிகளாக ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்