சினிமா செய்திகள்

கனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி - 'விக்ரம்' படத்தில் நடித்தது குறித்து சூர்யா டுவீட்..!

'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. மேலும் இந்த படத்தில் நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா இந்த படத்தில் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புகளிடையே நேற்று திரையரங்குகளில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், ரோலேக்ஸ் சூர்யாவின் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில் 'விக்ரம்' திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், "அன்புள்ள கமல்ஹாசன் அண்ணா எப்படி சொல்றது..!?. உங்களுடன் திரையில் இணைந்து நடிக்கும் கனவு நனவானது.

இந்த கனவை நனவாக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு நன்றி. ரோலெக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் அன்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது" என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்