சினிமா செய்திகள்

அதில்தான் உண்மையான அழகு இருக்கிறது - நடிகை ஐஸ்வர்யா மேனன்

கதைகளை தேர்வு செய்வதில் நான் கவனமாக இருக்கிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா மேனன் கூறினார்.

தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா மேனன் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்துள்ளார். ஐஸ்வர்யா மேனன் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

நான் நடிக்கும் ஒவ்வொரு படமும் ஹிட் ஆக வேண்டும் என்று ஆசைப்படுவேன். ஆனால் வெற்றி என்பது ரசிகர்கள் கையில் இருக்கிறது. அவர்களுக்கு சினிமா பிடிக்க வேண்டும். அப்போதுதான் வரவேற்பை பெறும்.

நான் கதைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்கிறேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து இருக்கிறேன். வித்தியாசமான கதைகள் எந்த மொழியில் இருந்து கிடைத்தாலும் விடமாட்டேன். மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. அது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு படமொன்றில் முழுக்க புடவை அணிந்து நடித்து இருக்கிறேன்.

எனக்கு வாழ்க்கையில் புடவை அணிய மிகவும் பிடிக்கும். புடவையில்தான் உண்மையான அழகு இருக்கிறது. தற்போது தமிழில் காதல் கதையம்சம் உள்ள படமொன்றில் நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்