சினிமா செய்திகள்

'கோட்' படத்தின் 3-வது பாடல் ஆகஸ்ட் 3-ல் வெளியீடு

விஜய் நடித்துள்ள ‘கோட்’ படத்தின் 3-வது பாடல் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 3வது பாடல் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் நாளை காலை 11 மணிக்கு மற்றொரு அப்டேட் வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

'கோட்'திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்