சினிமா செய்திகள்

“டைரக்டர் சொன்ன கதை ஒன்று; படமாக்கிய கதை வேறு...”

ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனபின், விஜயா புரொடக்சன்ஸ் தனது தயாரிப்பு பணியை தொடரும் என்று அந்த பட நிறுவனம் கூறுகிறது.

சென்னை,

தமிழ் திரையுலகின் பாரம்பரியமான பட நிறுவனங்களில், விஜயா புரொடக்சன்ஸ்சுக்கு முக்கிய இடம் உண்டு. எம்.ஜி.ஆர். நடித்த எங்க வீட்டுப்பிள்ளை, நம்நாடு, சிவாஜிகணேசன் நடித்த வாணி ராணி, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமல்ஹாசன் நடித்த நம்மவர், விஜய் நடித்த பைரவா, அஜித் நடித்த வீரம் உள்பட பல வெற்றி படங்களை தயாரித்த நிறுவனம், இது.

விஜய் சேதுபதி நடிப்பில், விஜய்சந்தர் இயக்கத்தில், விஜயா புரொடக்சன்ஸ் தயாரித்து கடந்த வருடம் வெளிவந்த சங்க தமிழன் படம் தோல்வி அடைந்தது. பல வெற்றி படங்களை தயாரித்த அந்த பட நிறுவனம், ஒரே ஒரு படத்தில் சறுக்கி விட்டது. (டைரக்டர் சொன்ன கதை ஒன்று...படமாக்கிய கதை வேறு...இதுவே தோல்விக்கு காரணம் என்று படக்குழுவினர் கூறுகிறார்கள்.)

என்றாலும், இந்த பட நிறுவனம் தொடர்ந்து படம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆனபின், விஜயா புரொடக்சன்ஸ் தனது தயாரிப்பு பணியை தொடரும் என்று அந்த பட நிறுவனம் கூறுகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு