சினிமா செய்திகள்

இரவு 2 மணிக்கு வந்த போன் கால்... ‘பவழ மல்லி’ வாய்ப்பு எப்படி கிடைத்தது? - பகிர்ந்த கயாடு லோஹர்

"பவழ மல்லி" பாடல் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து சமீபத்திய நேர்காணலில் கயாடு லோஹர் பகிர்ந்துள்ளார்.

சென்னை,

சாய் அபயங்கர் இசையமைத்து, சுருதி ஹாசன் பாடிய "பவழ மல்லி" (Pavazha Malli) பாடல், விவேக் வரிகளில் வெளியாகி, இணையத்தில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது. இந்த மியூசிக் வீடியோவில் சாய் அபயங்கருடன் கயாடு லோஹர் நடனமாடியுள்ளார்.

இப்பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த பாடல் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது குறித்து சமீபத்திய நேர்காணலில் கயாடு லோஹர் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

“ஒருநாள் நள்ளிரவு இரண்டு மணிக்கு சாய் அபயங்கர் எனக்கு போன் செய்து, ‘என்னிடம் ஒரு சூப்பர் பாடல் இருக்கிறது, அதில் நீங்களும் இருக்க வேண்டும்’ என்றார். பாடலை கேட்டதும் எனக்கும் இது பெரிய ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை வந்தது. வெறும் இரண்டு நாட்கள் மட்டுமே ரிகர்சல் செய்தேன்’ என்றார்.