சினிமா செய்திகள்

சிம்பு குரலில் 'டீசல்' படத்தின் 2-வது பாடல்

ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.

தினத்தந்தி

சென்னை,

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் 'டீசல்'. ஹரிஷ் கல்யாண் கெரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது.

இதில் ஹரிஷ் கல்யாணுடன் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பீர் கானா பாடல் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இப்படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'தில்லுபரு ஆஜா' என்ற இந்த பாடலை சிம்பு பாடி இருக்கிறார். இது வருகிற 18-ம் தேதி மாலை 4.50 மணிக்கு வெளியாக உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது