சினிமா செய்திகள்

அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' படத்தின் டீசர் வெளியானது..!

நடிகர் அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் அருள்நிதி. இவர் தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் 'தேஜாவு' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ஸ்மிருதி வெங்கட், மைம் கோபி, காளி வெங்கட், சேத்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே. விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அருள்நிதியின் சகோகரரான உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளத்தில் 'தேஜாவு' திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார். மேலும் அருள்நிதி 'டைரி' மற்றும் 'டி பிளாக்' என்ற இரண்டு திரில்லர் படங்களிலும் நடித்து முடித்துள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்