சென்னை,
இயக்குனர் பிரயன் ஜார்ஜ் தற்போது திரில்லர் வகை கதையம்சம் கொண்ட திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஜனனி, ராஜாஜி, பால சரவணன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளத்தில் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு 'கூர்மன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தை எம்.கே எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கிறது. டோனி பிரிட்டோ இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.தேவராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.