சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டிரைலர் வெளியானது

'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவியும், டிஜிட்டல் உரிமத்தை ஜீயோ ஹாட்ஸ்டாரும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், ‘தாய் கிழவி’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 75 வயது மூதாட்டியாக ராதிகா நடித்துள்ளார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.