சினிமா செய்திகள்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த சோதனை - அவரே வெளியிட்ட தகவல்

பாலியல் சர்ச்சையில் சிக்கிய சின்மயிக்கு வந்த தகவலை, அவரே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

தினத்தந்தி

சமீபகாலமாக சமூகவலைதளத்திலும், இணையதளத்திலும் அதிகம் பேசப்பட்டவர், பின்னணி பாடகி சின்மயி. இவருடைய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து தொடர் விவாதங்களாக இந்த சர்ச்சை போய்க்கொண்டிருந்தது.

சின்மயி, டப்பிங் யூனியனிலும் உறுப்பினராக இருந்தார். அந்த யூனியனில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருக்கிறார். இது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக இணைய தளங்களில் நிறைய பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். அப்போது சொல்லவில்லை. இத்தனை வருடங்கள் கழித்து இப்போது சொல்கிறீர்கள் என்று விமர்சனங்கள் எழுந்தன.

மெசேஜ் மூலம் அவரை பலர் ஆபாசமாக திட்டியிருக்கிறார்கள். அதை சின்மயியும் தனது டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். இவ்வளவு ஆபாசமான வார்த்தைகளா? என்று அவரின் ஆதரவாளர்களுக்கு பெரும் வருத்தமாக இருக்கிறது. இது, சின்மயிக்கு வந்த சோதனையாக கருதப்படுகிறது என்று சிலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.


தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு