சினிமா செய்திகள்

உலகத்தையே அதிரவைத்த 'ஜுராசிக் பார்க்'... ’நோ’ சொன்ன தென்னிந்திய நடிகை... ஏன் தெரியுமா?

1993-ம் ஆண்டு வெளியாகி உலகத்தையே அதிரவைத்த திரைப்படம் 'ஜுராசிக் பார்க்'.

சென்னை,

இன்று இந்திய நடிகைகள் ஹாலிவுட் படங்களில் நடிக்கக் கிடைக்கும் வாய்ப்பைத் தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகக் கருதுகின்றனர். பிரியங்கா சோப்ரா போன்ற நடிகைகள் ஹாலிவுட் மூலம் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அன்று இந்திய சினிமாவின் 'லேடி சூப்பர் ஸ்டார்' ஆகத் திகழ்ந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவி, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஹாலிவுட் வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்துள்ளார்.

1993-ம் ஆண்டு வெளியாகி உலகத்தையே அதிரவைத்த திரைப்படம் 'ஜுராசிக் பார்க்'. இப்படத்தை இயக்கியவர் உலகப் புகழ்பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஸ்ரீதேவிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்த வாய்ப்பை அவர் நிராகரித்தார்.

இந்த வாய்ப்பை ஏன் மறுத்தீர்கள் என்று ஸ்ரீதேவியிடம் கேட்கப்பட்டபோது, அவர் "இந்தியத் திரையுலகை விட்டுவிட்டு ஹாலிவுட் செல்ல எனக்கு அப்போது விருப்பமில்லை" என்று தெரிவித்தார். அச்சமயத்தில் ஸ்ரீதேவியின் திரைப்பயணம் இந்தியாவில் உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT