சினிமா செய்திகள்

’ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை’ - மனம் திறந்த பிரபல நடிகை

திரையுலகில் கிளாமரை காட்டிலும் நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையே அதிகம் மதிப்பதாக அவர் தெரிவித்தார்.

மும்பை,

பிரபல வெப் தொடரான ’ஆஷ்ரம்’ மூலம் கவனம் பெற்ற நடிகை திரிதா சவுத்ரி, தான் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் நடிக்க விரும்புவதாக கூறி இருக்கிறார்.

இது குறித்து சமீபத்திய பேட்டியில் அவர் பேசுகையில், ‘பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மீது எனக்கு மிகுந்த ஈர்ப்பு உள்ளது. அவரின் தீவிர ரசிகை நான். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்’ என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், திரையுலகில் கிளாமரை காட்டிலும் நடிப்புக்கு கிடைக்கும் அங்கீகாரத்தையே அதிகம் மதிப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை கிளாமரை விட நடிப்புக்கான பாராட்டுதான் முக்கியம். நீங்கள் எவ்வளவுதான் கிளாமராக திரையில் தோன்றினாலும், உங்கள் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்ய தவறினால், அந்த நடிப்பு இறுதியில் தோல்வியில்தான் முடியும்" என்றார். அவரது இந்த கருத்துகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகின்றன.