சினிமா செய்திகள்

'தவெக ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம்' - அமீர்

பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தவெக-விற்கு தேவைப்படுகிறது.

சென்னை,

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதே தற்போதைய சூழலில் தேவையானது என இயக்குநர் அமீர் பதிவிட்டுள்ளார்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், முதல்முறையாகப் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம், 233 தொகுதிகளில் போட்டியிட்டு 108 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட 10 இடங்கள் குறைவாக உள்ளதால் அரசியல் இழுபறி நீடிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தற்போது பலம் 113 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தவெக-விற்குத் தேவைப்படுகிறது.

இயக்குநர் அமீர், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம் என்று கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'விசிகவும், கம்யூனிஸ்ட்களும் காலம் தாழ்த்துவது தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல. தவெக ஆட்சி அமைப்பது காலத்தின் அவசியம்’ என்று தெரிவித்துள்ளார்.

தவெக ஆட்சி அமைக்க 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.