Image Courtesy : @officialavatar twitter 
சினிமா செய்திகள்

இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' வரும் 16-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலரில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும், கற்பனை உலகமும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 160 மொழிகளில் உலகம் முழுவதும் அவதார்-2 திரைப்படம் வெளியாக உள்ளது. தற்போது இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் உள்ளிட்ட படக்குழுவினர் பல்வேறு நாடுகளில் அவதார்-2 படத்திற்கான புரோமோஷன் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் அவதார்-2 படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும் இந்த படத்தின் நீளம் மொத்தம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் 10 நொடிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் படத்தின் காட்சிகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவதார்-2 மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை