சென்னை,
'மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ்' (Masters of the Universe) என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் மலையாளப் பதிப்பில், உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரமான 'பிரின்ஸ் ஆடம்/ஹீ-மேன்' (Prince Adam/He-Man) கதாபாத்திரத்திற்கு மலையாள நடிகர் உன்னி முகுந்தன் குரல் கொடுத்துள்ளார்.
'மாஸ்டர்ஸ் ஆப் தி யுனிவர்ஸ்' திரைப்படம் இந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் மலையாளப் பதிப்பில் பிரின்ஸ் ஆடம்/ஹீ-மேன் கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தன் குரல் கொடுத்துள்ள நிலையில், ஹீ-மேனின் முக்கிய எதிரியான 'ஸ்கெலட்டர்' (Skeletor) கதாபாத்திரத்திற்கு நடிகர் அதித்யா மேனன் குரல் கொடுத்துள்ளார்.
மேலும், கதையின் மற்றொரு முக்கிய கதாபாத்திரமான 'டங்கன்' (Duncan) என்ற கதாபாத்திரத்திற்கு நடிகர் ஹரிஷ் உத்தமன் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.