சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் அப்டேட்..!

நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் 'ஹே சினாமிகா' படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் 'ஹே சினாமிகா' திரைப்படத்தின் மூலம் நடன பயிற்சியாளர் பிருந்தா கோபால் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த திரைப்படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால், கே. பாக்கியராஜ், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி 25-ந்தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மார்ச் மாதம் 3-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் பிப்ரவரி 16-ந்தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்திற்கு பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராதா ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு