சினிமா செய்திகள்

“எப்1” படத்தின் 2வது பாகம் தொடர்பான அப்டேட்

ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில் பிராட் பிட் நடித்த ‘எப்1’ திரைப்படம் உலகளவில் 4900 கோடிக்கும் மேல் வசூலித்தது.

டாப் கன் மேவ்ரிக் படத்தை இயக்கிய ஜோசப் கொசின்ஸ்கி பிராட் பிட் நடிப்பில் எப்1 படத்தை இயக்கினார்.இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. உலகளவில் ரூ 4900 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தாண்டு வெளியாகி அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் எப்1 முதல் இடத்தில் உள்ளது. இப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் ஒரிஜினல் பிலிம்ஸ் தயாரித்தது.

காசுக்காக பல ரேஸ்களில் ஈடுப்பட்டு வரும் பிராட் பிட் தன் நண்பனின் டிம்ம் எப்1 ரேஸில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அங்கு ரேஸ் ஓட்ட வருகிறார். அங்கு ஏற்கனவே இளம் ரேஸரான ஜோஷ்வா இருக்கிறார். அவர்களுக்கு இடையே முரண் ஏற்படுகிறது. இதைத்தாண்டி எப்படி அவர்கள் ரேசில் வென்றார்கள் என்பதே படத்தின் கதையாகும். 

பொதுவாகவே கார் பந்தயங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள், திரையரங்க வசூலில் மிகப்பெரிய சாதனையை இதுவரை படைத்ததில்லை. 2013-ல் வெளியான ரஷ், 2023-ல் வெளியான பெராரி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், அவற்றின் சாதனைகளை வசூல் ரீதியாக முந்தியுள்ளது எப்1 திரைப்படம். உலகம் முழுவதும் எப் 1 பந்தயத்துக்கு ரசிகர்கள் குவிந்திருப்பதும் இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

பிராட் பிட் நடிப்பில் வெளியாகி உலகளவில் வசூல் வேட்டை செய்த எப்1 படத்தின் அடுத்த பாகம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இயக்குநர் ஜோசப் கொசின்ஸ்கி கூறியுள்ளார். சான்னி ஹேய்ஸ் கதாபாத்திரத்தின் அடுத்தடுத்த பயணங்கள் என்னவாக இருக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளதாகவும் பேசியுள்ளார்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்