சினிமா செய்திகள்

வடிவேல் சம்பளம் ரூ.10 கோடி?

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார்.

இம்சை அரசன் 24-ம் புலிகேசி பட சர்ச்சையால் பல வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் வடிவேல் இப்போது தடை நீங்கியதால் மீண்டும் நடிக்க வருகிறார். ஏற்கனவே முன்னணி கதாநாயகர்கள் படங்களில் சிரிப்பு நடிகராக வந்ததோடு சில படங்களில் கதாநாயகனாவும் நடித்தார். இப்போது மீண்டும் கதாநாயகனாகவே இரண்டாவது சுற்றை தொடங்குகிறார். அவர் நாயகனாக நடிக்க உள்ள படத்துக்கு நாய் சேகர் என்று பெயர் வைத்துள்ளனர். தலைநகரம் படத்தில் வடிவேல் நடித்த நாய்சேகர் என்ற கதாபாத்திரத்தின் பெயரையே படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். சுராஜ் இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் நாய்சேகர் படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசி இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனாலும் இது உறுதிப்படுதப்படவில்லை. நகைச்சுவை நடிகராக நடித்தபோது ஒருநாள் சம்பளமாக வடிவேல் ரூ.10 லட்சம் வரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. வடிவேல் கூறும்போது, படங்களில் நடிப்பது எனக்கு மறுபிறவி மாதிரி. தொடர்ந்து 5 படங்களில் நடிக்க உள்ளேன்'' என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்