சினிமா செய்திகள்

நான் அதை ஆதரிக்கவில்லை; ஆனால் எல்லோருக்கும் பொதுவானது - விஜய் ஆண்டனி பேச்சு

நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி 'ரோமியோ' படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தினத்தந்தி

இயக்குனர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'ரோமியோ'. இந்த படத்தில் மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா, ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, குடிப்பழக்கத்திலிருந்து விடுபட அனைவரும் பாடுபடும்போது ரோமியோ படத்தில் பெண்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை ஊக்குவிப்பதாக தெரிகிறது, என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்து நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், "மது ஆண்களுக்கு மட்டும் என்று எல்லை நிர்ணயம் செய்ய வேண்டாம். குடிப்பழக்கம் எல்லோருக்கும் பொதுவானது. ஆண்கள் குடிக்கலாம் என்றால், பெண்களும் குடிக்கலாம். நான் குடிப்பதை ஊக்குவிக்கவில்லை; ஆதரிக்கவில்லை. எல்லாமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது. குடிப்பது தவறு என்று சொன்னால், அதை இருபாலருக்கும் சொல்ல வேண்டும்". என்று கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு