சினிமா செய்திகள்

ஜூனியர் என்.டி.ஆர் மிஸ் செய்த கதையில் விஜய் தேவரகொண்டா?

'ஹாய் நான்னா' படத்தை இயக்கிய இயக்குநர் சவுரவ் உடன் விஜய் தேவரகொண்டா கைகோர்த்துள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர் விஜய் தேவரகொண்டா, தனது திருமணத்திற்குப் பிறகு அதிக படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். சமீபத்தில் தனது புதிய படத்தின் பணிகளைப் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கினார். நேச்சுரல் ஸ்டார் நானி நடித்த 'ஹாய் நான்னா' (Hi Nanna) படத்தை இயக்கிய இயக்குநர் சவுரவ் உடன் விஜய் தேவரகொண்டா கைகோர்த்துள்ளார்.

இந்நிலையில், இந்த படம் குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சௌர்யு முதலில் இந்தக் கதையை ஜூனியர் என்.டி.ஆர்-க்காகவே உருவாக்கியதாக கூறப்படுகிரது. ஆனால், பல படங்களில் பிசியாக இப்படத்திற்குத் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்றும் இதனால், சௌர்யு இந்தக் கதையை விஜய் தேவரகொண்டாவின் பிம்பத்திற்கு ஏற்பச் சில மாற்றங்களைச் செய்து தற்போது அவரை வைத்துத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

விஜய் தேவரகொண்டா தற்போது ராகுல் சங்கிருதியன் இயக்கத்தில் 'ரணபலி' (Ranabali) மற்றும் ரவி கிரண் கோலா இயக்கத்தில் 'ரவுடி ஜனார்தன்' (Rowdy Janardhan) ஆகிய படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் ரணபலி படத்தில் தனது மனைவி ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.