சினிமா செய்திகள்

’நான் சினிமாவிற்கு வர காரணமே விஜய்தான்’ - மாரி செல்வராஜ்

தற்போது நடிகர் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

சென்னை,

தியேட்டருக்கு செல்ல நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணம் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாரி செல்வராஜ் பேசுகையில், “விஜய் சாரின் சினிமா மீது எனக்கு பிரியம் உண்டு. நான் சினிமா நோக்கி நகர அவரும் ஒரு காரணம். ஒரு ரசிகனா விஜயை எனக்கு பிடிக்கும். நான் சினிமாவிற்கு வந்ததற்கு காரணமே விஜய்தான். தியேட்டருக்கு செல்ல விஜய் சார் ஒரு முக்கியமான காரணம்’என்றார்.

தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்து பேசுகையில், ‘யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்களுக்கு நல்லது செய்யலாம். யார் வந்தாலும் நாம் வரவேற்க வேண்டும். அவரின் அரசியல் நிலைப்பாடு முழுமையாக வெளிப்படும் போது புரிந்து கொள்ள முடியும். அவருக்கு என் வாழ்த்துகள்,” என்று கூறினார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘பைசன்’. இதில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது நடிகர் தனுஷ் உடன் மீண்டும் இணைந்து புதிய படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார்.

SCROLL FOR NEXT