சினிமா செய்திகள்

எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லன் வாய்ப்புகள்

தமிழில் வாலி, குஷி, நியூ உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபல டைரக்டராக வலம் வந்த எஸ்.ஜே.சூர்யா சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இப்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் தனித்துவ உடல் மொழியிலான வில்லன் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் எதிர்மறை வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஏற்கனவே விஜயின் மெர்சல் படத்தில் வில்லனாக வந்தார். சிம்புவின் மாநாடு படத்திலும் வில்லன் வேடம் ஏற்றார். இதில் அவரது வில்லத்தன நடிப்பு பேசப்பட்டது. தற்போது மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு வில்லனாகவும், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா-2 படத்தில் லாரன்சுக்கு வில்லனாகவும் நடிக்கிறார்.

ஷங்கர் இயக்கதில் ராம் சரண் நடிக்க தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ளார். இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் வில்லன் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிக வில்லன் வாய்ப்புகள் வருவதால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளாராம்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு