ரஜினி கேங் படத்தில் ரஜினி கிஷன் நாயகனாக நடித்துள்ளார். அவர் ஜோடியாக திவிகா நடித்துள்ளார். ராஜேந்திரன், ராமதாஸ், கூல் சுரேஷ், கல்கி ராஜா என பலர் நடித்துள்ளனர். ப்ளூ எனும் நாய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இப்படத்தை மிஷ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.
ஊரை விட்டு ஓடிப்போகும் ஒரு காதல் ஜோடி, கல்யாணம் செய்துகொள்ளும் நிலையில், எதிர்பாராதவிதமாக சந்திக்கும் அமானுஷ்ய விஷயங்களும் அதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும்தான் கதை. கலகலப்பான திரைக்கதையுடன், கமர்ஷியல் ஹாரர் காமெடியாக இப்படம் உருவாகியுள்ளது. எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், ரஜினி கேங் படத்தின் டிரெய்லரை நடிகர் விஷ்ணு விஷால் நாளை காலை 11.55 மணிக்கு வெளியிடுகிறார்.