சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் படத்தின் 'மைக் டைசன்' பாடல் வெளியானது..!

விஷ்ணு விஷால் நடித்துள்ள கட்டா குஸ்தி திரைப்படத்தின் 'மைக் டைசன்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'கட்டா குஸ்தி'. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் வெளியாக உள்ளது.

'கட்டா குஸ்தி' படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ரிச்சர்டு எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்கிறார். 'கட்டா குஸ்தி' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இந்த படத்தின் 2-வது பாடலான 'மைக் டைசன்' என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன், விக்கி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'கட்டா குஸ்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்