இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.
மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியானது.விஸ்மயாவின் முதல் படத்தை இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்குகிறார். இப்படத்திற்கு, துடக்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று இடுக்கியில் துவங்கியுள்ளது. இதில், நடிகர்களாக மோகன்லால், ஆஷிஷ் உள்ளிடோர் நடிக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க உள்ளார்.
View this post on Instagram