சினிமா செய்திகள்

திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்து விட்டார்: பெண் எம்.பி மீது தொழிலதிபர் பரபரப்பு புகார்!

தங்கள் திருமணத்தை பதிவு செய்யலாம் என்று பலமுறை கூறியதாகவும் ஆனால், நுஸ்ரத் ஜஹான் எம்.பி, மறுத்து விட்டதாகவும் தொழிலதிபர் நிகில் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிரபல நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யுமான நுஸ்ரத் ஜஹான், கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அப்போது வைரலாயின.

இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர். இதற்கிடையே, அறிக்கை வெளியிட்டிருந்த நுஸ்ரத், நாங்கள் எப்போதோ பிரிந்துவிட்டோம். என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசவேண்டாம் என்று நினைத்ததால் அதை பற்றி சொல்லவில்லை. நிகில் ஜெயினுடனான என் திருமணம் செல்லாது. ஏனெனில் இந்தியாவில் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்களுக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் அங்கீகாரம் தேவைப்படுகிறது. எங்களது திருமணம் அப்படி நடக்காததால் எங்கள் பிரிவு எப்போதோ முடிந்துவிட்டது என்ற அவர், தனது வங்கி கணக்குகளை நிகில் தவறாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்து நிகில் ஜெயின் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணத்தைப் பதிவு செய்யலாம் என்று பலமுறை நுஸ்ரத்திடம் வலியுறுத்தினேன். அவர் அதற்கு மறுத்துவிட்டார். நான் அவர் பணம் எதையும் எடுக்கவில்லை. என் மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, நுஸ்ரத், தனது சமூக வலைதளப் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்