சென்னை,
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான இவர், தான் ஏன் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். பிரபல நிகழ்ச்சி ஒன்றில் சல்மான் கான் கலந்து கொண்டபோது, அதன் தொகுப்பாளர் அவரிடம், "உங்களுக்கு எப்போதாவது அரசியலுக்கு வந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தோன்றியது உண்டா?" என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்து சல்மான் கான் கூறுகையில், "எனக்கு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பலமுறை தோன்றியதுண்டு. நான் வசிக்கும் கட்டிடத்தில் மொத்தம் 8 பிளாட்டுகள் உள்ளன. அதில் மூன்று பிளாட்டுகள் எங்களுடையவை. பிரதமர், அமைச்சர், எம்.எல்.ஏ, எம்.பி போன்ற பெரிய பதவிகளை எல்லாம் மறந்துவிடுங்கள். என் கட்டிடத்தின் செயலாளருக்கான தேர்தலில் நான் போட்டியிட்டால் கூட, தோற்றுவிடுவேன். என் சொந்த வீட்டிலிருந்தே எனக்கு 3 வாக்குகள் கிடைக்காது" என்றார். சல்மான் கானின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சல்மான் கான் தற்போது "மாத்ரூபூமி" என்ற போர் பின்னணி கொண்ட திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு முன்னதாக "பேட்டில் ஆப் கல்வான்" என்று பெயரிடப்பட்டிருந்தது. அபூர்வா லக்கியா இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தில் சித்ராங்கதா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதுதவிர, தில் ராஜு தயாரிப்பில், வம்சி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்திலும் சல்மான் கான் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.