சினிமா செய்திகள்

ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்தின் அடுத்த திரில்லர் மூவி

ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்திடம் 'ரெசிஸ்டர்' என்ற திரில்லர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

வாஷிங்டன்,

ஹாலிவுட் நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் வில் ஸ்மித். இவர் சினிமாவில் 'தி பிரெஷ் பிரின்ஸ் ஆப் பெல்-ஏர்' என்ற தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

இவர் பேட் பாய்ஸ் , பேட் பாய்ஸ் 2 , பேட் பாய்ஸ் பார் லைப், மென் இன் பிளாக் , மென் இன் பிளாக் 2, மற்றும் மென் இன் பிளாக் 3 போன்ற படங்களில் முன்னணி நடிகராக நடித்து புகழ் பெற்றார்.

தற்போது சோனி பிக்சர்சின் 'ரெசிஸ்டர்' என்ற திரில்லர் படத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித்திடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. டோட் பிளாக், ஜேசன் புளூமெண்டல், ஸ்டீவ் டிஷ், டோனி ஷா மற்றும் டேவ் வில்சன் ஆகியோரின் தயாரிப்பில் இப்படம் உருவாக உள்ளது.

முன்னதாக, வில் ஸ்மித் நடித்த 'பேட் பாய்ஸ்' மற்றும் 'ரைடு ஆர் டை' ஆகிய படங்கள் வெளியான முதல் 10 நாட்களிலேயே 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிக்க உள்ள 'ரெசிஸ்டர்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு