சினிமா செய்திகள்

பிப்ரவரியில் வெளியாகிறதா வலிமை திரைப்படம் ..?

வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ல் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக என்று தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது. இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் 'வலிமை' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ,திரையரங்கில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.இந்நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை ரத்து செய்தது .

இதனால் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ல் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்