சினிமா செய்திகள்

புதிய படத்தில் விஜய் ஜோடி ராஷ்மிகா?

விஜய்யின் 62-வது படமாக சர்கார் திரைக்கு வந்தது. அடுத்து புதிய படத்தில் நடிக்க அவர் தயாராகி உள்ளார். இந்த படத்தை அட்லி இயக்குகிறார்.

விஜய்-அட்லி இவர்கள் கூட்டணியில் தெறி, மெர்சல் படங்கள் ஏற்கனவே வந்தன. இப்போது மூன்றாவது தடவையாக சேர்ந்துள்ளனர். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

தற்காலிகமாக தளபதி 63 என்று அழைக்கின்றனர். ஏற்கனவே விஜய் ஜோடியாக நயன்தாரா, காஜல் அகர்வால், சமந்தா, அனுஷ்கா, தமன்னா என்று முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக வந்தார். புதிய 63வது படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

நயன்தாரா, சமந்தா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இப்போது ராஷ்மிகா மடன்னாவின் பெயரையும் பரிசீலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர் ஒருவரும் ராஷ்மிகாதான் விஜய் ஜோடியாக நடிக்கிறார் என்று டுவிட்டரில் பதிவிட்டார். அந்த டுவிட்டரின் கீழே ராஷ்மிகா, டேய் எனக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடாதேடா என்று தமாஷாக குறிப்பிட்டு உள்ளார்.

ராஷ்மிகா தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்