சினிமா செய்திகள்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் - கமல்ஹாசன்

என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடைய செய்வேன் என நடிகர் கமல்ஹாசன் கூறி உள்ளார்.#KamalHaasan #Politics #TNTour

தினத்தந்தி

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் ஜனவரி 16-ந்தேதி நள்ளிரவில் தனது அரசியல் பயணத்தினை பிப்ரவரி 21ந்தேதி தொடங்குகிறேன் என அறிவிப்பு வெளியிட்டார். அவர் பிறந்த ராமநாதபுரத்தில் கட்சியின் பெயரை அறிவிக்கிறார்.

ஆரம்பக்கட்ட சுற்றுப்பயணத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் வீட்டில் இருந்து நடிகர் கமல்ஹாசன் வரும் 21ந்தேதி அரசியல் பயணத்தினை தொடங்க திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் தெரிவித்துள்ள விளக்கத்தில், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன. அவரை போல பல கனவுகள் கொண்டவன் நான். விமர்சிப்பது மட்டும் என் வேலையன்று. நான் இறங்கி வேலை செய்ய வந்தவன் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், திராவிடம் என்பது தமிழ்நாடு தழுவியது மட்டுமல்ல. அது நாடு தழுவியது. மிகப்பெரிய சரித்திரமும், ஆந்த்ரோபாலஜியும் தொல்பொருள் ஆராய்ச்சியும் திராவிடத்தில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இன்று கமல் அவரது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில், 4 மாவட்ட கமல் நற்பணிமன்ற முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் அப்போது சுற்றுப்பயண ஏற்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்ந்து மற்ற மாவட்ட நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்து கிறார். பிப்ரவரி 10-ந் தேதி கமல்ஹாசன் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக அங்கு செல்கிறார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் கமலின் சுற்றுப்பயண விவரம் முழுமையாக அறிவிக்கப் படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வேளச்சேரியில் நடந்த ஒரு விழாவில் கமல்ஹாசன் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என் ஆயுளுக்குள் இந் தியாவை பெருமை அடைய செய்வேன். இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும். அதற்கான பயணம் அடுத்த மாதம் தொடங்குகிறது. அப்போது பல சகோதரர்கள் கிடைப்பார்கள்.

கல்வி, சுகாதாரம், மருத் துவம், போக்குவரத்து ஆகி யவை சரி இல்லை. கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் செய் யவே வந்துள்ளேன்.நாம் உலகத்தின் முன்னோடி ஆகும் காலம் வெகுதொலைவில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது