சினிமா செய்திகள்

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்- மருத்துவமனையில் அனுமதி

மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார், சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார்.

மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவணி (28) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இரண்டு நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்