ஓ.டி.டி.

இந்த வாரம் ஓடிடியில் என்னென்ன படங்கள் ரிலீஸ் - லிஸ்ட் இதோ

இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் வெளியாகி உள்ளன என்பதை காண்போம்.

திரையரங்குகளில் மட்டுமல்ல, ஓ.டி.டி. தளங்களிலும் தற்போது திரைப்படங்கள் அணிவகுத்து வருகின்றன. வாரம் தோறும் புதிய படங்கள், வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓ.டி.டி. தளங்களில் எந்தெந்த படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகி உள்ளன என்பதை இப்போது பார்க்கலாம்.

சீக்ரெட் ஸ்டோரீஸ்: ரோஸ்லின்

மீனா நடித்துள்ள இந்த வெப் தொடர் இன்று (27ம் தேதி) ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

தடயம்

சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த தொடர் இன்று (27ம் தேதி) ஜீ5 தளத்தில் ரிலீசாகிறது.

அக்யூஸ்டு

கொங்கனா சென் சர்மா, பிரதிபா ராண்டா நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று (27ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

ஷட்டர்

சைக்கலாஜிக்கல் திரில்லர் மற்றும் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவான இந்த படம் இன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது.

பார்முலா 1:டிரைவ் டு சர்வைவ்

பார்முலா 1 கார் பந்தயத்தை மையப்படுத்திய இந்த பிரபல வெப் தொடரின் 8வது சீசன் இன்று நெட்பிளிக்ஸில் ரிலீசாகியுள்ளது.

பாகி-டு: தி இன்விஸிபிள் சாமுராய்

ஆக்சன் மற்றும் திரில்லர் கலந்த ஜப்பானிய அனிமேஷன் தொடர். நேற்று நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

பிரிட்ஜெர்டன்

ரொமான்டிக் வெப் தொடரான இதன் 4வது சீசனின் இரண்டாம் பகுதி நேற்று நெட்பிளிக்ஸில் ரிலீசாகியுள்ளது.

பாலிங் ஸ்கைஸ்

ஆக்சன், சயின்ஸ் பிக்ஷன், ஏலியன் பின்னணியிலான இந்த தொடர் முதல் சீசன் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

டி/ஓ பிரசாத் ராவ்: காணபடுதலெது

மகளை தேடும் தந்தையின் மர்மப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இந்த தெலுங்கு திரில்லர் இன்று ஜீ தளத்தில் வெளியாகிறது.

ஹனி

மாந்திரீக நம்பிக்கையால் ஒரு சிறுமிக்கு ஏற்படும் அநீதியை பேசும் இந்த தெலுங்கு திரில்லர் படம் இன்று சன் நெக்ஸ்ட்டில் ரிலீசாகிறது.

ஸ்ரீ சிதம்பரம் காரு

வம்சி தும்மலா, சந்தியா வசிஷ்டா நடித்துள்ள இந்த படம் நேற்று ஈடிவின்னில் வெளியானது.