முன்னோட்டம்

கால் டாக்சி

பின்னணியில் இருப்பவர்கள் யார்? ‘கால் டாக்சி’ டிரைவர்களின் தொடர் கொலைகள்

தமிழ்நாட்டில், கால் டாக்சி டிரைவர்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். இந்த மர்ம கொலைகள் நகரில் பெரும் பீதியை ஏற்படுத்துகின்றன. கொலைகாரர்கள் யார், அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்று துப்பறியும் வேலையில் போலீஸ் ஈடுபடுகிறது.

கொலைகாரன் சிக்கினானா, அவனின் கொலைக்கான காரணம் என்ன? என்பதை கருவாக வைத்து, கால் டாக்சி படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது என்கிறார், டைரக்டர் பா.பாண்டியன். அவர் மேலும் கூறியதாவது:

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து, கால் டாக்சி படத்தின் திரைக்கதை அமைந்துள்ளது. படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை நானே எழுதியிருக்கிறேன். கதாநாயகனாக சந்தோஷ் சரவணன் நடிக்க, அவருக்கு ஜோடியாக அஸ்வினி நடித்துள்ளார். இவர், மெர்வின், மரகதக்காடு, ஜீவி ஆகிய படங்களில் நடித்தவர்.

சேரன்ராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், ஈ.ராமதாஸ், பசங்க சிவகுமார், ஆர்த்தி கணேஷ் ஆகியோரும் நடித்து இருக்கிறார்கள். படப்பிடிப்பு முடிவடைந்தது. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்