முன்னோட்டம்

காசு மேலே காசு

‘காசு மேலே காசு’ படத்தில் கதைநாயகனாக நகைச்சுவை நடிகர் மயில்சாமி நடிக்கிறார்.

மன்னார் வளைகுடா, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி, இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகியிருக்கிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில், காதல் என்ற சொல்லுக்கு அர்த்தமே இல்லாமல் போய் விட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகன் அல்லது மகளுக்கு எவ்வாறு வாழ்க்கை அமைய வேண்டும்? என்று ஆயிரம் கனவுகளுடன் வாழ்கிறார்கள். படத்தின் கதை நாயகன் மயில்சாமி, பேராசை பிடித்தவர். தன் மகனுக்கு மிகப்பெரிய இடத்தில் சம்பந்தம் பண்ண துடிக்கிறார். அதற்காக அவர் எவ்வாறெல்லாம் பெண் தேடுகிறார்? என்பதே கதை.

இதில், முக்கிய வேடத்தில் மயில்சாமி நடிக்கிறார். அவருடைய சரவெடி காமெடி படம் முழுக்க இருக்கும். சென்னை, புதுச்சேரி, மகாபலிபுரம், கீழ்கட்டளை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. மயில்சாமியுடன், புதுமுகங்கள் ஷாருக், காயத்ரி ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, சாமிநாதன், கோவை சரளா, நளினி, மதுமிதா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பி.ஹரிஹரன், பி.உதயகுமார், பி.ராதாகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் தயாரிக்கிறார்கள்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்