பார்ட்டி படத்தில், நாசர், ஷாம், நிவேதா பெத்துராஜ், ரம்யா கிருஷ்ணன்
அ ம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிப்பில், வெங்கட் பிரபு டைரக்ஷனில் உருவாகி வரும் பார்ட்டி படத்தில், சிறப்பு தோற்றத்தில் ஷாம் நடித்து இருக்கிறார். அவர் ஒரு ஸ்டைலான தாதாவாக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகிறார்:-
டைரக்டர் வெங்கட் பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக் கூடியவர். அவருடைய படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. அந்த வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு படப்பிடிப்புக்காக பிஜி தீவு சென்றேன். நான் நடிக்க ஆசைப்பட்ட ஒரு கதாபாத்திரம். என் மனதுக்கு பிடித்த ஒரு கதாபாத்திரமாக அமைந்ததில், கூடுதல் மகிழ்ச்சி.
நட்புக்கு மரியாதை கொடுக் கும் அற்புதமான படக்குழு வினர். கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
எத்தனை படங்கள் நடித்தோம் என்பதை விட, எவ்வளவு காலம் ரசிகர்களின் மனதில் நிற்கும் படங்களில் நடித்தோம் என்பதில், தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறேன். இந்த புத்தாண்டில், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் என்னை பார்க்கலாம்.