முன்னோட்டம்

சரவணன் இருக்க பயமேன்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி ஸ்டாலின் தயாரித்து வழங்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’.

இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கிறார். ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, லிவிங்ஸ்டன், மனோபாலா, ரவிமரியா, மன்சூர் அலிகான், யோகிபாபு, மதுமிதா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இசை- டி.இமான், ஒளிப்பதிவு- கே.ஜி.வெங்கடேஷ், பாடல்கள்- யுகபாரதி, படத்தொகுப்பு- கே.ஆனந்த லிங்ககுமார், நடனம்- பிருந்தா, தினேஷ், தினா, ஸ்டண்ட்- திலீப் சுப்பராயன், கலை- ருத்ரகுரு, எழுத்து, இயக்கம்- எஸ்.எழில்.

இதில், உதயநிதி ஸ்டாலின் நண்பனாக யோகிபாபு நடித்திருக்கிறார். சூரி மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். காதல், நகைச்சுவை கலந்த படமாக சரவணன் இருக்க பயமேனே உருவாகி இருக்கிறது.

படம் பற்றி கூறிய இயக்குனர் எழில்........

இந்த படத்துக்கு டி.இமான் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் கிடைத்து இருக்கிறது. இந்த படம் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் எல்லா அம்சங்களும் இருக்கும் என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்