சினிமா

நடிகை சுரபியை மணப்பவரின் தகுதிகள்

தான் மணப்பவரின் தகுதிகள் குறித்து நடிகை சுரபி தெரிவித்துள்ளார்.

தமிழில் இவன் வேறமாதிரி, வேலையில்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சுரபி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:

சினிமாவில் அதிக எண்ணிக்கையில் படங்களில் நடிப்பதை விட எத்தனை சிறந்த கதாபாத்திரங்களில் நடித்தோம் என்பதுதான் முக்கியம். நான் இப்போது மும்பையில் எனது வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறேன். நடிகையான பிறகு இந்த அளவுக்கு ஓய்வு கிடைத்தது இல்லை. எனது பார்வையில் காதல் என்பது மிகவும் சிறந்தது. எனக்கு ஒரு காதல் கடிதம்கூட வரவில்லை. கல்லூரி நாட்களில் நிறைய பேர் நேரில் வந்து அவர்கள் காதலை சொல்லி இருக்கிறார்கள்.

காதல் திருமணங்களை ஆதரிக்கிறேன். இப்போது எனது பார்வை சினிமா மீதுதான் இருக்கிறது. எனக்கு வரப்போகிற கணவர் என்னை நன்றாக பார்த்துக்கொள்பவராகவும் குடும்பத்தை நேசிப்பவராகவும் நகைச்சுவை கலந்து பேசுபவராகவும் இருக்க வேண்டும். இப்போது தெலுங்கில் 2 படங்களிலும் கன்னடத்தில் ஒரு படத்திலும் நடிக்கிறேன். நல்ல கதை அமைந்தால் வெப் தொடரிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு சுரபி கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு