தெலுங்கு திரை உலகின் மூத்த நகைச்சுவை நடிகர் கடலி ஜெயசாரதி. இவர் ஜகன் மோகினி, சீதாராம் கல்யாணம், பக்த கண்ணப்பா, மன உரி பாண்டவுலு, டிரைவர் ராமுடு, பரமானந்தையா சிஷ்யுலக கதை உள்பட 372 படங்களில் நடித்து இருக்கிறார்.
தர்மத்மது, அக்கி ராஜு, ஸ்ரீராம சந்திரடு, விததா ஆகிய படங்களை கிருஷ்ணம் ராஜுவுடன் இணைந்து தயாரித்தும் இருக்கிறார்.
ஜெயசாரதிக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. சிறுநீரக பாதிப்பும் இருந்தது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 83. ஜெயசாரதி மறைவுக்கு தெலுங்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.