புதுச்சேரி
புதுவை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டு துறை சார்பில் 19 சலவை தொழிலாளர்களுக்கு இலவசமாக ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள இஸ்திரி பெட்டி வழங்கும் நிகழ்ச்சி முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேலும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தவில் கலைஞருக்கு ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள தவில்,அதன் இணை பொருட்கள் மற்றும் 2 நாதஸ்வர இசைக்கலைஞர்களுக்கு ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள நாதஸ்வர பொருட்களை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. இலவசமாக வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நலத்துறை இயக்குனர் பத்மாவதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவி இயக்குனர் சுகந்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.