புதுச்சேரி,
புதுச்சேரியில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் தவறான வழிகளில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், திராவிட விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் அண்ணா சதுக்கம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.