கல்வி/வேலைவாய்ப்பு

மாணவர்கள் கவனத்திற்கு...இளநிலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியீடு

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோவு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தோவு நடைபெற உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவ கல்லூரிகளில் அட்மிஷன் கிடைக்கும். அதாவது, அரசு மற்றும் தனியா மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுவேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேவு மூலம் மாணவா சேக்கை நடத்தப்படுகிறது..

2026-27-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேவு அடுத்த ஆண்டு நாடு முழுவதும் தேவு நடைபெற உள்ளது. அதில், 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு அந்தத் தேவு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான பாடத் திட்டங்கள் https://nmc.org.in/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு