கோப்புப்படம் 
கல்வி/வேலைவாய்ப்பு

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் வேலை: நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்- தமிழக அரசு

பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000, ஊதியமாகவும் 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000 ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000 ஊதியமாகவும் வழங்கப்படும்.

மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267).

இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தும் கல்விச்சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு வருகிற 18ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையலாம். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்