பெங்களூரு

கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான நுழைவு தேர்வு தொடங்கியது

கர்நாடகத்தில் தொழிற்படிப்புகளுக்கான சி.இ.டி. நுழைவு தேர்வு இன்று தொடங்கியது.

தினத்தந்தி

பெங்களூரு:

கர்நாடகத்தில் என்ஜினீயரிங், கட்டிட கலை உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) தொடங்கியது. பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 486 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. 2 லட்சத்து 16 ஆயிரத்து 525 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி மையத்திற்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தார். அவரை தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி இல்லை என்று கூறினர்.

இதையடுத்து அந்த மாணவி ஹிஜாப்பை கழற்றி வைத்துவிட்டு தேர்வு எழுதினார். மாநிலம் முழுவதும் எந்த பிரச்சினையும் இன்றி நுழைவு தேர்வு அமைதியாக நடந்தது. முதல் நாளில் உயிரியல் மற்றும் கணித பாட தேர்வுகள் நடைபெற்றன. நாளை (வெள்ளிக்கிழமை) இயற்பியல், வேதியியல் தேர்வுகள் நடக்கின்றன. 18-ந் தேதி எல்லையோரம் வசிக்கும் மற்றும் வெளிமாநில கன்னட மாணவர்களுக்காக கன்னட தேர்வு நடக்கிறது. கைக்கெடிகாரம் உள்பட மின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு