புதுச்சேரி

தந்தை, மகள் படுகாயம்

கடலூர்-பாண்டி ரோட்டில் புதுச்சேரி நோக்கிசென்ற மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் தந்தை, மகள் படுகாயம் அடைந்தனர்.

பாகூர்

கன்னியக்கோவில் அடுத்த சுள்ளியாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 60). சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக வேலாயுதம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் தனது மகள் பானுப்பிரியாவுடன் கடலூர்-பாண்டி ரோட்டில் புதுச்சேரி நோக்கிசென்று கொண்டிருந்தார். கன்னியக்கோவில் அருகே சென்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த வேலாயுதம், பானுப்பிரியா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு கடலூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு