மும்பை

ரெயில்வே பால தூணில் கார் மோதியதில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் பலி

ரெயில்வே பால தூணில் கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் பலியானார்.

மும்பை, 

ரெயில்வே பால தூணில் கார் மோதி முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் பலியானார்.

தீப்பிடித்து எரிந்த கார்

பர்பானியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சீத்தாராம் கன்தத். இவரது பேரன் சாகில் விஜய்(வயது28). இவர் நவிமும்பை சான்பாடா பகுதியில் தாய், தங்கையுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று அதிகாலை இவர் நவிமும்பையில் இருந்து பேலாப்பூருக்கு காரில் சென்றார். சாகில் விஜய் காரில் வேமாக சென்றதாக தெரிகிறது. கார் பாம் பீச் ரோடு, என்.ஆர்.ஐ. அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அந்த பகுதியில் இருந்த நெருல்-உரன் ரெயில்வே பால தூணில் பயங்கரமாக மோதியது. கார் மோதிய வேகத்தில் சாகில் விஜய் வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் கார் வெடித்து தீப்பிடித்து எரிந்தது.

சம்பவ இடத்தில் பலி

தகவல் அறிந்து சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் காரில் எரிந்த தீயை அணைத்தனர். மேலும் எம்.எல்.ஏ.வின் பேரனை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சாகில் விஜய் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வின் பேரன் பலியான சம்பவம் நவிமும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு